காக்கா பாளையத்தில் சீனியர் சேம்பியன்ஷிப் கபடி போட்டி

79பார்த்தது
பொங்கல் பண்டிகையையொட்டி சேலம் மாவட்டம் காக்காபாளையம் பகுதியில் 71 வது மாநில அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் சீனியர் சேம்பியன்ஷிப் கபடி போட்டி 3 நாட்கள் நடக்கவுள்ளது. இதன் துவக்க விழா நேற்று இரவு நடந்தது. இந்த விழாவில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக துணை செயலாளர் சுரேஷ்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கபடி போட்டியினை துவக்கி வைத்தார். மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் பல்வேறு மாவட்டம் மற்றும் மாநிலங்களிலிருந்து கபடி வீரர்கள் பங்கு பெற உள்ளனர். ஆண்கள் பிரிவில் 32 அணியினரும், பெண்கள் பிரிவில் 32 அணியினரும் பங்கு பெற்று விளையாட உள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி