கெங்கவல்லி முருகன் கோயிலில் திருக்கல்யாண வைபவம்

57பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் ஆத்தூர் தம்மம்பட்டி செல்லும் சாலையில் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் உள்ளது. கோவிலில் 42 ஆம் ஆண்டு மாலை அணியும் வைபவ விழா கடந்த டிசம்பர் மாதம் 30 ஆம் தேதி தொடங்கியது. நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்த நிலையில் சுவாமி திருக்கல்யாணம் நிகழ்ச்சி வெகு விமர்சையாக நேற்று (ஜனவரி 5) நடைபெற்றது. முன்னதாக திருமணத்திற்குப் போல் பெண் வீட்டுச் சீர் கொண்டுவரப்பட்டு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது. முன்னதாக பொதுமக்கள் சார்பாக இரண்டு லட்சம் மதிப்பிலான ஐம்பொன்னாலான மயில் வாகன சிலையை கோவிலுக்கு வழங்கினர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி