சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள தந்தை பெரியார் நகர மன்ற கூடத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. நகர மன்ற தலைவர் நிர்மலா பபிதா தலைமையில் நடைபெற்ற தீர்மானங்கள் வாசிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பேசிய திமுக உறுப்பினர் தங்கவேலு வட்டாட்சியர் உட்பட அனைத்து அரசு அதிகாரிகளும் வாகனங்களில் தமிழில் பெயர் எழுதி வைத்துள்ளனர். ஆனால் உங்கள் வாகனத்தில் கமிஷனர் என பெயர் உள்ளது இதனை மாற்றவும். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஹிந்தி படி என்று சொல்கிறார். இது எப்படி ஏற்றுக் கொள்வது அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், அதிமுக நிர்வாகிகள் மக்களிடம் ஓட்டு கேட்டு வந்தால் அவர்களை பொதுமக்கள் விட்டு துடைடப்பத்தால் அடிப்போம் என பேசினார். இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் மேலும் மக்கள் பிரச்சனை பேசாமல் மற்ற பிரச்சனைகளை ஏன் பேச வேண்டும் என கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மற்ற திமுக உறுப்பினர்கள் அதிமுக உறுப்பினர்களை சமாதானம் படுத்தி இருக்கைகளில் அமருமாறு அறிவுறுத்தினர். இதனால் இரு தரப்பினிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக உறுப்பினர்கள் தங்களுக்கு பேச அனுமதி மறுப்பதாக கூறி கூட்ட அரங்கில் இருந்து வெளியே வந்து நுழைவாயில் பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டனர்.