மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000 வழங்குவதை வரவேற்கிறோம் என அதிமுக முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியுள்ளார். சட்டப்பேரவையில் உரையாற்றி தங்கமணி, "மகளிருக்கான வேலைவாய்ப்பு குறைவாக உள்ளது. அதை அதிகரிக்க வேண்டும்" என வலியுறுத்தினார். இதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, "இந்தியாவில் தொழில் நிறுவனங்களில் அதிக பெண்கள் பணிபுரியும் மாநிலம் தமிழ்நாடு.ஒரு லட்சம் மகளிரை தொழில் முனைவோராக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்" என பதிலளித்துள்ளார்.