சுற்றுலா வாகன ஓட்டுனர்கள் சங்கத்தினர் எஸ். பியிடம் புகார் மனு

75பார்த்தது
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகர சுற்றுலா வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுனர் நல சங்கத்தின் நிர்வாகி ராஜ்குமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் இன்று எஸ்பி அலுவலகத்தில் போலீஸ் அதிகாரியை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில் சேலம் மாவட்டம் தாரமங்கலம் கைலாசநாதர் கோவில் அருகில் உள்ள காலியான இடத்தில் கடந்த 60 ஆண்டு காலமாக நகர சுற்றுலா வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் நல சங்கம் சார்பில் வாகனங்களை நிறுத்தி தொழில் செய்து வருகிறோம்.
இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கோவிலில் பணிபுரியும் சில நபர்களின் தூண்டுதலின் பேரில் அதிமுக உறுப்பினரான ஜெயக்குமார் தாரமங்கலம் நகர சுற்றுலா வாகன உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் நல சங்கத்தின் குடிசையை சேதப்படுத்தி அங்கு கல்லையும் வைத்து இடத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்.
இது குறித்து கேட்டதற்கு இது கோவிலுக்கு சொந்தமான இடம் நாங்கள் தான் இந்த இடத்தில் இருப்போம் எனக் கூறி இனி இங்கே வாகனங்கள் நிறுத்தக் கூடாது என கூறி மிரட்டல் விடுகின்றனர்.
இது குறித்து தாரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை மாறாக அதிமுக உறுப்பினர் ஜெயக்குமாருக்கு ஆதரவாக போலீசார் செயல்பட்டு வருகின்றனர். என் கூறினர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி