மேச்சேரியில் பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு.. 5 பேர் கைது

84பார்த்தது
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே மூர்த்திப்பட்டியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகன் சண்முகமூர்த்தி (வயது 47). விவசாயி. இவருக்கு சொந்தமாக 3.38 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இவர், குடும்ப சூழ்நிலை காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு கோவையை சேர்ந்த சரவண சுஜய் என்பவரிடம் தனது நிலத்தை எழுதி கொடுத்து ரூ. 85 லட்சம் வாங்கினார். பணத்தை திருப்பி கொடுக்கும்போது நிலத்தை திருப்பி தந்துவிட வேண்டும் என தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், சரவணசுஜயிடம் வாங்கிய பணத்தை வட்டியுடன் திருப்பி கொடுக்க சண்முகமூர்த்தி முன்வந்தபோது, அவர் கூடுதல் வட்டி கேட்டதால் அவர்கள் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதுகுறித்து சண்முகமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் மேச்சேரி போலீசார் சரவணசுஜய், அவருடன் வந்திருந்த கோவையை சேர்ந்த ராஜசேகர், ராம்குமார், பாரதிராஜா உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இதில் ராஜசேகர், ராம்குமார், பாரதிராஜா ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். கோவையில் தனியார் நிதி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் ராஜசேகரும், மேச்சேரி போலீசில் ஒரு புகார் செய்தார். அதில், மேச்சேரி எம்.காளிப்பட்டியை சேர்ந்த சண்முகமூர்த்தி என்பவர் தனது நண்பரான சரவணசுஜயிடம் கடனுக்கு நிலத்தை கிரையம் செய்து கொடுத்துள்ளார். அந்த நிலத்தை பார்க்க சென்றபோது, சண்முகமூர்த்தி மற்றும் அவருடைய நண்பர்கள் உருட்டு கட்டையால் அடித்து தாக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி