தோரமங்கலம் ஓங்காளியம்மன் கோவில் திருவிழா

62பார்த்தது
தோரமங்கலம் ஓங்காளியம்மன் கோவில் திருவிழா
சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே செலவடையை அடுத்த தோரமங்கலம் ஓங்காளியம்மன் கோவில் திருவிழா கடந்த 11-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. திருக்கல்யாணம் வைபவம், கொடியேற்றம், அம்பாள் திருத்தேர் கங்கணம் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை ஓங்காளியம்மன் கோவில் முன்பு உள்ள தீ குண்டத்தில் பக்தர் தீ மிதித்தனர். 

பின்னர் பொங்கல் வைத்தல் மாவிளக்கு எடுத்தல் மற்றும் ஆயிரக்கணக்கான கிடா வெட்டுதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் ஜலகண்டாபுரம், தோரமங்கலம், காட்டம்பட்டி, செலவடை உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி