எடப்பாடி - Edappadi

சேலத்தில் நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை

சேலத்தில் நீட் தேர்வு பயத்தில் மாணவி தற்கொலை

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே பெரிய முத்தையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகள் சத்யா இவர் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தனியார் நீட் பயிற்சி மையத்தில். கடந்த 10 மாதங்களாக பயிற்சி பெற்று வந்தார். இந்த நிலையில் நீட் தேர்வு கடினமாக இருப்பதாகவும், தன்னால் தேர்வில் வெற்றி பெற முடியாது என்றும் கூறி வந்தார். இந்நிலையில் கடந்த 31ஆம் தேதி வீட்டில் இருந்த விஷத்தை குடித்து விட்டு மயங்கினார். அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று (ஏப்ரல் 3) மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கொங்கனாபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


రంగారెడ్డి జిల్లా