சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே ஏத்தாப்பூரில் 146 அடி உயரம் கொண்ட முத்துமலை முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக வருகை தருகின்றனர். இந்நிலையில் கோவிலுக்கு பின்புறம் வனத்துறைக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் பரப்பளவு கொண்ட நிலத்தில் மரங்கள் மற்றும் புல் புண்டுகள், திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. இது குறித்து அப்பகுதியில் இருந்த பக்கதர்கள் பொதுமக்கள் ஆத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
நிகழ்விடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீஸ் சார்பாக வழக்கு பதிவு செய்து மர்மன் அவர்கள் யாராவது தீ வைத்தார்களா அல்லது வெயிலின் தாக்கத்தில் தீ விபத்து ஏற்பட்டதா என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.