சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவள்ளி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதியில் இருந்து திமுக, பாமக, அமமுக,விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகிய 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் முன்னிலையில் அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி ஆத்தூரில் நடைபெற்றது.
சேலம் புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் புதியதாக கழகத்தில் இணைந்தவர்களுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் அதிமுக துண்டு அணிவித்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தார்.
இந்த கூட்டத்தில் பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் பேசியது:
திமுக தலைவர் எப்போது பார்த்தாலும் பொதுக்கூட்டத்தில் பேசும் போதும் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 200 இடங்களில் வெற்றிபெறும் என்கிறார். அது இல்லை என்பதை இங்குள்ள கூட்டம் நிரூபித்து காட்டியுள்ளது. மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வருவதற்கு இங்கு உள்ள கூட்டம் சாட்சி. அதிமுக வலுப்பெற்றுள்ளது. மக்கள் செல்வாக்கு கொண்ட கட்சி என்பதை நிரூபித்துள்ளோம்.
திமுக தேய்ந்து வருகிறது. இன்றும் மன்னராட்சி வேண்டும், குடும்ப ஆட்சி வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
முன்பு மக்கள் இப்போது எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு. அப்படிப்பட்ட ஆட்சி தான் நடந்து கொண்டிருக்கிறது. பள்ளிகளில் ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறு அனைத்து ஆசிரியர்களையும் பாதிக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் ஜெய்சங்கரன், நல்லதம்பி, சித்ரா, ஆத்தூர் நகர கழக செயலாளர் மோகன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலை பெருமாள் மற்றும் அதிமுக ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.