கெங்கவல்லி ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கும்பாபிஷேக விழா

66பார்த்தது
சேலம் மாவட்டம் கெங்கவல்லி பருவத ராஜகுல தெருவில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் புதிதாக புனரமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்த நிலையில் அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இந்த கும்பாபிஷேக விழாவிற்கு கடந்த 17ஆம் தேதி அம்மனுக்கு காப்பு கட்டுதல், வாஸ்து பூஜை, புற்று மண் எடுத்தல், முளைப்பாரி இடுதல் முதல் காலை யாக பூஜை, இரண்டாம் கால யாக பூஜை நடைபெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை மூன்றாம் கால, நான்காம் கால யாக பூஜை நடைபெற்று பல்வேறு புண்ணிய ஸ்தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீரை யாகசாலையில் வைத்து பூஜை செய்து, ஊர் முக்கியஸ்தர்கள் புனித நீரை தலையில் சுமந்தவாறு மேள தாளங்கள் வானவேடிக்கை முழங்க கோவிலை சுற்றி ஊர்வலமாக வந்து கோபுர கலசத்தில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

பின்னர் அங்கு திரண்டிருந்த பக்தர்களுக்கு புனித நீரை தெளித்தனர். அதைத்தொடர்ந்து அருள்மிகு ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மகா தீபாராதனை செய்யப்பட்டது. மேலும் இந்த கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கெங்கவல்லி, ஆனையம்பட்டி, தெடாவூர், நடுவலூர், பள்ளக்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு அங்காள பரமேஸ்வரி அம்மனை தரிசித்தனர்.

தொடர்புடைய செய்தி