சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சிக்கு உட்பட்ட வணிகவளாக கட்டிடத்தில் 21 கட்டிடங்களுக்கான நிலுவை வரி 42 லட்சம் செலுத்தாததால் நேற்று வணிக வளாகம் செல்லும் பாதையை நகராட்சி அதிகாரிகள் ஜேசிபி மூலம் பள்ளம் தோண்டி மூடப்பட்டது. இந்நிலையில் வணிகவளாக உரிமையாளர் நகராட்சி அதிகாரியிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இன்று நிலுவை வரி தொகையை செலுத்தியதால் வணிக வளாகப் பாதை மூடப்பட்ட நிலையில் தற்போது ஜேசிபி இயந்திரம் மூலம் தோண்டப்பட்ட பாதையை மீண்டும் சரி செய்யப்பட்டு வணிக வளாகப் பாதை திறக்கப்பட்டது.