திருச்சியில் நீதிமன்ற ஊழியர் அருண் மாரிமுத்து தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக நீதி வேண்டி தமிழக முழுவதும் நீதிமன்ற ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் முன்பு நேற்று தமிழ்நாடு நீதித்துறை ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
உயிரிழந்த ஊழியர் குடும்பத்தாருக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்களை எழுப்பினர். இதில் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.