ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 2-வது போட்டியில் இந்திய பந்தவீச்சை தாக்குப்பிடிக்க முடியாத வங்கதேச அணி 228 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டாஸ் வென்று பேட்டிங் செய்த வங்கதேச அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், தவ்ஹித் ஹிருதாய் - ஜேக்கர் அலி ஜோடி நிதானமாக ஆடியது. தவ்ஹித் 100, ஜேக்கர் 68 ரன்களுக்கும் ஆட்டமிழக்க அந்த அணி 49.4 ஓவர்களிலேயே ஆட்டமிழந்தது. இந்திய பந்துவீச்சில் ஷமி 5, ராணா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.