பறவைகளின் மூளைகளில் உள்ள செல்கள் பூமியின் காந்தப்புலத்தை உணரும் திறன் பெற்றுள்ளன. இதுவே அவை சரியான திசையில் செல்வதற்கு காரணமாகும். மேலும் பறவைகளின் விழித்திரையில் உள்ள கிரிப்டோக்ரோம்கள் எனப்படும் புரதங்கள் உள்ளன. இவை புவியின் காந்தப் புலத்தை உணர்ந்து திசைமானியாக செயல்படுகின்றன. பறவைகள் பகல், இரவு, வானிலை மாற்றங்கள் ஆகியவற்றையும் உணரும் திறன் பெற்றுள்ளன.