திருவாடானை அருகே தனியார் பள்ளிக்கு நிகராக ஆண்டு விழா நடத அரசு பள்ளியினர்
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே படப்பை கிராமம் உள்ளது இங்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது இந்த பள்ளி ஆண்டு விழா இன்று இரவு தலைமையாசிரியர் ஜான் பிரிட்டோ தலைமையில் நடைபெற்றது. இதில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக மேடை அமைக்கப்பட்டு அலங்கார விளக்குகள் டிஸ்கோ லைட் உள்ளிட்டவைகள் சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. மாணவ மாணவிகள் கரகாட்டம், ஒயிலாட்டம், கிராமிய கலைகள் என பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். கலைநிகழ்ச்சிகளை கண்ட பெற்றோர்கள், பார்வையாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் ஆரவாரத்தை ஏற்படுத்தினர். முன்னதாக நடைபெற்ற விளையாட்டு போட்டி கட்டுரை போட்டி ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வினை முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்விற்கு பள்ளி மேலாண்மை குழு மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட மாணவ மாணவிகள் அவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்