திருவாடானையில் அருள்மிகு.
திரௌபதி அம்மன் கோவில் திருக்கல்யாணம் வைபவம் சிறப்பாக நடைபெற்றது
ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட திரௌபதி அம்மன் கோவில் வடகிழக்கு தெருவில் உள்ளது. கோவிலுக்கு கடந்த மார்ச் 27ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி திருவிழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து மகாபாரதத்தில் திரௌபதியை தர்மர் திருமணம் செய்து கொள்ளும் நிகழ்ச்சியாக திருக்கல்யாணம் வைபவம் நடந்தது.
முன்னதாக சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கி சிறப்பு பிராத்தனைகள் செய்து திருக்கல்யான வைபவத்தை நடத்தி வைத்தார்கள். அதைத் தொடர்ந்து மாலை மாற்றும் நிகழ்வும் நடைபெற்றது.
திருகல்யாணம் முடிந்த பிறகு திருமண கோலத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்கள்.
இந்நிகழ்வினை தொடர்ந்து அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
இந்த திருக்கல்யான வைபவத்தில் நூற்றுக்கணத்கான பெண் பக்தர்கள் கலந்துகொண்டார்கள்.