திரோபதை வேடமிட்டு வீதிஉலா வந்த பக்தர்கள்.

73பார்த்தது
திருவாடானை அருள்மிகு தர்மர் மற்றும் அருள்மிகு திரோபதை அம்மன் கோவில் பங்குனி உற்சவத்தை முன்னிட்டு மகாபாரத போரின் 17ம் நாள் நிகழ்வாக திரோபதை வேடமிட்டு வீதிஉலா வந்த பக்தர்கள்.

திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்தால் பராமரிப்பில் பல நூறு ஆண்டுகளுக்கு மேலாக அருள்மிகு தர்மர் மற்றும் அருள் திரெளபதி அம்மன் கோவில் உள்ளது.

இக்கோவில் பங்குனி உற்சவ விழா கடந்த மார்ச் 27ம் தேதி கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழாவில். ஒவ்வோர்நாளும் சிறப்பு அபிஷேக ஆராதணைகள் நடைபெற்றுவருகிறது.

அதனை தொடர்ந்து இன்று 9ம் நாள் திருவிழா நிகழ்வாக மகாபாரத போரின் 17ம் நாள் நிகழ்வினை நினைவு கூறும் வகையில் போரில் வெற்றி பெற்றவுடன் தனது தலை முடியை அள்ளி முடியும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில்
திரோபதை அம்மன் வேடமிட்ட பக்தர் திருவாடான நகர்முழுவதும் இரவில் சுற்றி வீதி உலா வந்தார்கள். இவர்களை பொது மக்களும் பகதர்களும் வழிபட்டனர். , இந்த கோவில் பல நூறு ஆண்டுகள் பழமைவாய்ந்த கோவில் ஆகும், எத்தனையோ ஆண்டுகளை கடந்து இன்றளவும் விழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி