திருவாடானை நில அளவை பிரிவு அலுவலகத்திற்கு அரசு அதிகாரிகள் தாமதமாக வருவதால் மக்கள் பெரும் அவதிக் குள்ளாகி வருகிறனர்.
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை நில அளவை பிரிவு வட்ட துணை ஆய்வாளர் முருகன், மற்றும் நில அளவையர்கள் யாரும் 10. 30 மணிக்கு மேலாகியும் இதுவரை அலுவலகத்திற்கு வரவில்லை அதனால் பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருக்கும் அவல நிலை உள்ளது. மேலும வட்ட துணை ஆய்வாளர் முருகன் தனது சொந்த ஊரான மதுரையில் இருந்து வருவதால் கால தாமதம் ஆகிறது என்று தகவல் தெரிவித்த
மேலும் இந்த அலுவலகத்தில் நில அளவைக்கு மனு கொடுத்து 5 மாதத்திற்கும் மேலாகியும் பல மனுக்கள்நிலுவையில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த அலுவலர்கள் தொடர்ந்து கால தாமதமாக வருவதால் பல நூறு மனுக்கள் அதிகளவில் தேங்கியுள்ளது. என்றும் தெரிவிக்கின்றனர்.