தனியார் பள்ளி 41ம் ஆண்டு வைரவிழா விமர்சையாக நடைபெற்றது.

66பார்த்தது
ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானையில் ராஜன் மெட்ரிக்குலேசன் பள்ளி மற்றும் ராஜன் நர்சரி & பிரைமரி பள்ளி 41 ம் ஆண்டு விழா விமர்சையாக நடந்தது. விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் சிறப்பாக நடை பெற்றது. இந்நிகழ்விற்கு  பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஜெயக்குமார், வழக்கறிஞர் கண்ணன், மதுரை மருத்துவர் பாண்டியன், அண்னை தெரசா மகளிர் பல்கலைகழக தலைமை இயக்குனர் மீனாபிரியதர்ஷினி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள். மேலும் விழாவை சிறப்பிக்க திருவாடானை தாசில்தார் ஆண்டி, துணை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார்கள். சின்னகீரமங்கலம் பங்கு தந்தை சேவியர் சத்தியமூர்த்தி, பெரியாளார செந்தில்குமார், உள்ளிட்டவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள் வரவேற்புரையாக பள்ளியின் தாளாலர் அருள் நிர்மலாசெல்வராஜ், ராஜன் மெட்ரிகுலேஷன் பள்ளியின் ஆண்டு அறிக்கையை முதல்வர் சசிகலா வாசித்தார். முடிவில் பள்ளி ஒருங்கிணைப்பாளர் செல்வி நன்றி உரை வழங்கினார், முன்னதாக நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், கல்வி தேர்வில் முதல் மூன்று இடம் பெற்றவர்களுக்கும் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்காக மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி