

ராமநாதபுரம்: விளையாட்டு போட்டியில் கலந்து கொள்ள அழைப்பு
ராமநாதபுரம் மாவட்ட அளவில் நடைபெறக்கூடிய கோடைகால பயிற்சி முகாம் ஏப். 25 முதல் மே. 15 வரை சீதக்காதி சேதுபதி விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது. தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, ஹாக்கி, கையுந்துபந்து, டென்னிஸ், இறகுப்பந்து ஆகிய விளையாட்டுகளில் மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி முகாமில் பயிற்சி அளிக்கப்படும். முகாமில் கலந்துகொள்பவர்கள் மைதானத்திற்கு நேரில் வரலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்தார்.