திருவாடானை: தாயின் உடலை ஒப்படைக்க கூறி சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

54பார்த்தது
திருவாடானை அருகே சுக்ராபுரம் பகுதியை சிங்காரம் இவருக்கு இரண்டு மனைவிகள் முதல் மனைவி வீரம்மாள் இவருக்கு வாரிசுகள் இல்லை இதனால் இரண்டாவது மனைவி வள்ளியை திருமணம் செய்துள்ளார். வள்ளிக்கு சின்னத்தம்பி, விஸ்வநாதன், சித்திரா என இரண்டு ஆண் ஒரு பெண் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணமாகி வெளியூரில் வசித்து வருகின்றனர். சிங்காரம் ஏற்கனவே இறந்து விட்டார். அதுமுதல் வீரம்மாள் தனது சகோதரியின் மகள் பராமரிப்பில் இருந்துள்ளார். வீரம்மாள் உடல் நலக்குறைவால் படுத்தபடுக்கையாக இருந்த வந்த நிலையில் வீரம்மாளின் சகோதரி மகளே பராமரித்து வந்துள்ளனர். அவ்வப்போது தனது பெரியம்மாவை வந்து பார்த்து நலம் விசாரித்து செல்வதாக கூறப்படுகிறது. 

இந்நிலையில் வீரம்மாள் நேற்று (ஏப்ரல் 1) இயற்கை மரணம் அடைந்துவிட்டார். இறப்பை மறைத்து விட்டதாகவும், சாவில் மர்மம் இருப்பதாக கூறி சிங்காரம் மகன் சின்னத்தம்பி திருவாடானை காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல் நிலையத்தினர் சம்பவ இடத்திற்கு சென்று வீரம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என கூறி சிங்காரம் மகன் மற்றும் உறவினர்கள் காவல்துறையிடம் முறையிட்டனர். அதற்கு உறவினர்கள் ஒத்துக்கொள்ளாமல் இருந்த நிலையில் பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர்புடைய செய்தி