ஊதியம் 4000 கொடியை விடுவிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

84பார்த்தது
திருவாடானை பகுதிகளில் திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து 100 நாள் வேலைக்குரிய ஊதியம் 4000 கொடியை விடுவிக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை நான்கு ரோடு பகுதியில் திமுக மத்திய ஒன்றியம் சார்பில் அதன் செயலாளர் சரவணன் தலைமையில், 100 நாள் வேலை திட்டத்தில் ஊதியம் ரூபாய் 4000 கோடியை விடுவிக்க கோரி மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில்
600க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினார்கள். மத்திய அரசு நிதியான 4000 கோடியை வழங்கிட கோரியும் மத்திய அரசை கண்டித்தும் பதாகைகளை கைகளில் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பினார்கள். நிகழ்வில் திமுக ஒன்றிய, நகர, கிளைகழக நிர்வாகிகள், தொண்டர்கள் பலர் கலந்து கொண்டார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி