தொண்டி தனியார் மருத்துவமனையில் மத நல்லிணக்க நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் ஏவிகே மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனை வளாகத்தில் முதலாம் ஆண்டு சமூக நல்லிணக்க இப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி மருத்துவர் சேகர் ஏற்பாட்டில் நடைபெற்றது இந்நிகழ்வில் பரிபாலன் சபை தலைவர்கள் உறுப்பினர்கள். கிறிஸ்துவ பங்கு தந்தைகள், அனைத்து ஜமாத் தலைவர்கள் உறுப்பினர்கள், மற்றும் கவுன்சிலர்கள் பொதுமக்கள் என ஏராளமான கலந்து கொண்டார்கள் அனைவருக்கும் நோன்பு கஞ்சி வைத்து கொடுக்கப்பட்டு நோன்பு திறக்கப்பட்டது இந்நிகழ்வில் திருவாடானை துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்