திருவாடானை அருகே பெருந்திறள் கூட்டத்தில் நடந்த அரசு பள்ளி ஆண்டு விழா.
மாணவர்களின் கலை நிகழ்ச்சியோடு நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே அரும்பூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இன்று ஆண்டு விழா பெருந்திறல் விமர்சையாக நடைபெற்றது. ஆண்டு விழாவில் பள்ளியின் ஆண்டறிக்கையை தலைமை ஆசிரியர் நிர்மலா வாசித்தார். இந்த விழாவில் முன்னதாக நடைபெற்ற விளையாட்டு போட்டி, கட்டுரை போட்டி, ஓவிய போட்டி உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கும், பெற்றோர்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது இந்நிகழ்வில் காண மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் , பள்ளி ஆசிரியை ஆசிரியைகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்