தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 3 பயனாளிகளுக்கு சுற்றுலா மற்றும் சரக்கு வாகனம் வாங்குவதற்கு ரூ.33,19,468 திட்டத்தொகையில் மானியமாக ரூ.10,24,905 இன்று ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் வழங்கினார்.