ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோயிலில் விநாயகரும் முருகனும் இணைந்து ஒரே கருவறையில் காட்சியளிக்கின்றனர். தெய்வங்கள் இருவரையும் ஒரே சந்நிதியில் தரிசிப்பது பெரும் வரம். சொத்துவழக்குப் பிரச்னைகள், குடும்பச் சிக்கல்கள், உறவு பிரச்னைகள், சகோதர, சகோதரிகளிடையே உருவாகும் சண்டைகள் நீங்க இங்கு வேண்டிக் கொள்கின்றனர். சனீஸ்வரரின் அன்னை சாயாவின் அம்சம் நிறைந்த தலவிருட்சம் இக்கோயிலின் தனிச் சிறப்பாகும்