திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பிரிதிவிராஜ், கோதை தம்பதியருக்கு 62 நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர் நேற்று (மார்.24) இரவு குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் போது சிறிது நேரம் கழித்து குழந்தை அசைவற்ற நிலையில் இருந்துள்ளது. இதனை கண்ட பெற்றோர்கள் குழந்தையை திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளார். பால் குடிக்கும்போது மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.