கையில் தேசிய கொடியுடன் ஆன்மீக நடை பயணம்.!
ராணுவ வீரர்கள் மற்றும் குடும்பத்தார்கள் நலம் பெற இந்தியா முழுவதும் தேசிய கொடியுடன் நடைப்பயணம் மேற்கொண்டுள்ள சாமியார் செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்தியபிரதேசம், பத்தேபூர் மாவட்டம், கஹோர்லி பகுதியைச் சேர்ந்த சன்யாசி சிவ்சிவாக் சிவ்கரன் (40). இவர் பெரிய தேசிய கொடியினை தனது தோலில் சுமந்தவாறு நடந்தே வருகிறார். இது பற்றி அவரிடம் விசாரித்த போது, நம் நாட்டை மழை, வெயில் பாராமல் தங்களது குடும்பத்தையும் விட்டு, நாட்டையும் நம்மையும் பாதுகாக்கும் ராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் நலம் பெற வேண்டி மற்றும் தேசிய ஒருமைப்பாடு மேலோங்கவும் வேண்டி கடந்த 25 மார்ச் 2022-ம் தேதி காஷ்மீரில் இருந்து தனது நடைபயணத்தை தொடங்கி உள்ளார். அவர் இன்று (செப் 20) ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதிக்கு வந்துள்ளார் ஒவ்வொரு மாநிலமாக கடந்து தமிழகம் வந்த இவர், இன்று சின்னகீரமங்கலம் பகுதியில் இருந்து ராமேஸ்வரம் செல்ல வந்திருந்தார். அவருக்கு தேவகோட்டை வடக்கு ஒன்றிய பிஜேபி தலைவர் ராமசுப்பையா, தேவகோட்டை இந்து முன்னணி நகர தலைவர் சுரேஷ் திருவாடானை பிஜேபி நிர்வாகிகள் விஜயராஜா உள்ளிட்ட பலர் வரவேற்பு அளித்தனர். இது பற்றி அவர் கூறும்பொழுது, ராமேஸ்வரம் சென்று விட்டு அங்கிருந்து சென்னை மார்க்கமாக ஊருக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தார்.