ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அடுத்த முள்ளிமைனை மீனவ கிராமத்தில் வசிக்கும் மீனவர்களிடம் லாப நோக்கத்தோடு ஒரு சிலர் சட்டவிரோதமான முறையில் ரேஷன் அரிசிகளை சேகரித்து மூட்டைகளாக கட்டி சரக்கு வாகனத்தில் ஏற்றி செல்வதாக தொண்டி மெரைன் போலீசாருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் விரைந்து சென்ற மரைன் போலீசார் சரக்கு வாகனத்தை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது சரக்கு வாகனத்தில் 50 மூட்டைகளில் சுமார் இரண்டு டன் எடை கொண்ட ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது.
இதனையடுத்து சரக்கு வாகனத்துடன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த மரைன் போலீஸர் தொண்டி மரைன் காவல் நிலையத்துக்கு எடுத்து வந்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் ரேஷன் அரிசியை அதிக விலைக்கு காரைக்குடியில் உள்ள ஒரு அரிசி ஆலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த வாகனத்தை ஓட்டி வந்த புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த கிஷோர் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த மனோஜ் குமார் மற்றும் அஞ்சு குமார் என வடமாநில இளைஞர்கள் இருவர் உட்பட மூன்று பேரையும் பிடித்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னர் மரைன் போலீசார் சரக்கு வாகனம், ரேஷன் அரிசி மற்றும் மூன்று இளைஞர்களையும் ராமநாதபுரம் குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வுத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்க உள்ளனர்