உலக நீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு  பேரணி

70பார்த்தது
திருவாடானையில் உலக நீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு  பேரணி நடைபெற்றது

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை பேருந்து நிலையத்திலிருந்து ஊராட்சி ஒன்றியம், வேர்ல்ட் விஷன், சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் தொண்டி கோல்டன் ரோட்டரி கிளப் இணைந்து உலக நீர் தின விழிப்புணர்வு பேரணி துவக்கப்பட்டது. இந்த பேரணியானது திருவாடானை பகுதிகளில் வளம் வந்தனர். போது கைகளில் ஏந்திய பதாகைகளில் நம்  பகுதியை சுத்தமாகவும் பசுமையாகவும் வைத்திருப்போம், எமது கடை பகுதியை குப்பையற்ற பகுதியாக பராமரிப்போம், பிளாஸ்டிக் வேண்டாம் என்று சொல்வோம், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம் என்ற வாசகங்கள் அடங்கிய  பதாகைகளை ஏந்தி குப்பைகளை சுத்தம் செய்தவரே வலம் வந்தனர். குப்பைகளால் ஏற்படும் தீமைகள் பற்றியும் எடுத்துரைத்து பேரணியாக வந்தனர். இன் நிகழ்வில் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் கோல்டன் ரோட்டரி கிளப் , வேர்ல்ட் விஷன், சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகிகள்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி