ராமேஸ்வரத்தில் இருந்து விசைப்படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களின் விசைப்படகை இலங்கை கடற்படை வீரர்கள் மடக்கி பிடித்தனர். படகில் இருந்த 7 மீனவர்களையும் அவர்கள் விசாரித்து ராமேஸ்வரம் திரும்பிச் செல்லும் படி எச்சரித்து அனுப்பினர். அதன் பின் அவர்கள் இந்திய எல்லைகுள் மீன்களை பிடித்து நேற்று கரை திரும்பினர். இது குறித்து மீனவர்கள் மீன்வளத்துறையிடம் புகார் தெரிவிக்கவில்லை