தமிழ்நாடு காவல்துறையில் 10 உயரதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி நெல்லை சரக டிஐஜியாக இருந்த மூர்த்தி ராமநாதபுரம் சரக டிஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். தற்போது நெல்லை மாநகர காவல் ஆணையராக உள்ள சந்தோஷ் ஹதிமனிக்கு நெல்லை சரக டிஐஜி பொறுப்பும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் ராமநாதபுரம் டிஐஜி அபினவ் குமார் மதுரைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சென்னையிலும் பல உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.