திருவாடானை அரசு கல்லூரியில் பெண்களுக்கான தொழில் முனைவோர்களுக்கு சிறுதானிய உணவு தயாரிப்பு பயிற்சி வகுப்புகள் நடந்தது
ராமநாதபுரம் மாவட்டத்தில், குறிப்பாக திருவாடனை வட்டாரத்தில், தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில் தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் வளமிகு வட்டாரங்கள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், திருவாடனை வட்டாரம் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ராமநாதமரம் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தலின் படி இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கும் நோக்கில், மூன்று நாள் சிறுதானியத்தின் மூலம் உணவு பொருட்கள் தயாரிப்பது பற்றிய யிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.
இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட பெண்கள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இப்பயிற்சி வகுப்பின் மூலம் பயனடைந்த பெண்கள் தொழில் முனைவோர்களாக வளர்ந்து, சமூகத்தில் தலைநிமிர்ந்து நிற்கும் வகையில் தங்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயிற்சி வகுப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் மாவட்ட திட்ட மேலாளர் பொன் வேல்முருகன் செய்திருந்தார்