தென் கொரியாவின் தலைநகர் சியோலில் ஒரு பெரிய புதைகுழியில் விழுந்த இருசக்கர வாகன ஓட்டி உயிரிழந்தார். நேற்று (மார்ச்.24) உள்ளூர் நேரப்படி மாலை 6:30 மணியளவில் அந்த நபர் காங்டாங் மாவட்டத்தில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது. இதில் முன்னால் சென்றுகொண்டிருந்த கார் பள்ளத்தில் விழுந்து வெளியே குதித்தது. அதன் பின்னல் வந்த பைக் ஓட்டுநர் பள்ளத்தில் விழுந்தார். இதனையடுத்து 50 மீட்டர் ஆழத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்த வீடியோ வெளியாகியுள்ளது.