சிவகங்கை - Sivaganga

சிவகங்கை: போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் திடிரென மயக்கம்

மாவட்டம் முழுவதும் அரசு பள்ளிகளில் பணிபுரிந்துவரும் பகுதி நேர ஆசிரியர்கள் தங்கள் பணியை நிரந்தரம் செய்யக்கோரி சிவகங்கை ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டதுடன் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். 100 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டுவந்த நிலையில் ஆட்சியர் அலுவலக வாயிலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோது காளையார்கோவிலை சேர்ந்த மனோகரன் என்கிற ஆசிரியர் இவர் மானாமதுரையை அருகே உள்ள மூங்கில் ஊரணி அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் திடிரென கூட்டத்தில் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து அவரை சக ஆசிரியர்கள் மீட்டு முதலுதவி அளித்ததுடன் 108 ஆம்புலன்ஸை வரவழைத்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆசிரியர்கள் போராட்டத்தில் ஆசிரியர் ஒருவர் மயங்கிவிழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வீடியோஸ்


சிவகங்கை
Nov 11, 2024, 17:11 IST/மானமதுரை
மானமதுரை

சிவகங்கை: சாலையில் ஓடிய குதிரை - பொது மக்கள் அவதி

Nov 11, 2024, 17:11 IST
சிவகங்கை நகர் முழுவதும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன. போக்குவரத்துக்கு இடையூறாக ஆங்காங்கே ஆடு , மாடு, நாய்கள், குதிரைகள் என ஏராளமான கால்நடைகள் சுற்றித்திரிந்த வண்ணம் உள்ளன. வளர்ப்பவர்கள் அதனை கட்டி வைக்காமல் அவிழ்த்து விடுவதால் அது சாலைகளில் சுற்றித் திரிகின்றன குறிப்பாக திருப்பத்தூர் சாலை, பேருந்து நிலையப் பகுதி ஆட்சியர் அலுவலகம் செல்லும் சாலைகளில் சுற்றித்திரிகின்றன. சில சிலநேரங்களில் ஒன்றையொன்று விரட்டியபடி செல்வதால் சாலைகளில்களில் செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனேயே சென்று வரும் நிலையில் சிவகங்கை சிவகங்கை அரசு மருத்துவமனை அருகே உள்ள மானாமதுரை தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் குதிரை ஒன்று வெறிகொண்டு ஓடியுள்ளது. இதனால் இதனால் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர். மேலும் 108 வாகனமும் அந்த சாலையில் செல்ல குதிரை வழி விடாமல் சாலையை மறித்து செல்லும் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.