கனடா சர்வதேச மாணவர்களுக்கு கட்டுப்பாடுகளை அதிகரித்துள்ள நிலையில், சர்வதேச மாணவர்கள், மாற்று வழிகள் குறித்து யோசிக்கத் துவங்கியுள்ளார்கள். இதுகுறித்து ஆய்வுக்குட்படுத்தப்பட்டவர்களில், வெறும் 16 சதவிகித மாணவர்கள் மட்டுமே கனடாவில் கல்வி கற்க விருப்பம் தெரிவித்துள்ளார்கள். இந்திய மாணவர்களைப் பொருத்தவரை, அவர்கள் அமெரிக்கா மற்றும் நியூசிலாந்தில் கல்வி கற்பதில் ஆர்வம் காட்டத்துவங்கியுள்ளார்கள். அமெரிக்காவில் 4 சதவீதமும், நியூசிலாந்தில் 5 சதவீதமும் கல்விகற்க விரும்புகின்றனர்.