ராமநாதபுரம் ஸ்ரீ வழிவிடு முருகன் கோவில் 85 வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழாவிற்கான கொடியேற்றம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு 10 நாட்கள் தொடர்ந்து பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகள், சொற்பொழிவுகள், கலை நிகழ்ச்சிகள், நாட்டிய நிகழ்ச்சிகள் நடைபெற்று பங்குனி மாதம் 28 ந்தேதி ( ஏப்ரல் 11) பங்குனி உத்திர பெருவிழா நடைபெற உள்ளது.
ராமநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வழிவிடு முருகன் கோயிலின் 85 வது ஆண்டு பங்குனி உத்திர பெருவிழா இன்று காலை கணபதி பூஜையுடன் துவங்கியது. ஆண்டு தோறும் பக்தர்கள் விரதம் இருந்து பால்குடம் எடுத்தல், வேல் பூறுதல், காவடி எடுத்தல் உள்ளிட்ட நேத்து கடன்களை பக்தர்கள் செலுத்துவார்கள் அதன் துவக்கமாக இன்று காலை 6. 17 மணிக்கு மேல் 6. 58 மணிக்குள் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள அலங்கரிக்கப்பட்ட கொடிமரத்தில் வேதவிற்பன்னர்கள் பூஜைகள் செய்து பங்குனி உத்திர பெருவிழா நிகழ்ச்சிக்கான கொடியேற்றத்துடன் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.