ராமேஸ்வரத்தில் நேற்று (மார்ச் 25) ஆட்டோ ஓட்டுனர்களுக்கும், ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பக்தர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இதில் காவல் துறையினர் ஆட்டோ ஓட்டுநர் மேல் வழக்கு பதிவு செய்தனர். இதனை கண்டித்து ஆட்டோ ஓட்டுநர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையம் அருகே இன்று (மார்ச் 26) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின் காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்தனர்.