பள்ளி மாணவர்கள் வகுப்புபை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

64பார்த்தது
பரமக்குடி அருகே தலைமை ஆசிரியை சஸ்பென்ட்: பள்ளி மாணவர்கள் வகுப்புபை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்.


பரமக்குடி அருகே புதுக்குடி அரசு நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்யக்கோரி பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகேயுள்ள புதுக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 103 மாணவ, மாணவிகள் மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இப்பள்ளியில் தலைமை ஆசிரியை உட்பட நான்கு ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இப்பள்ளியில் படிக்கும் ஏழாம் வகுப்பு மாணவி யாழினி கடந்த வெள்ளிகிழமை கண்மாயில் மூழ்கி உயிரிழந்தார்.

கவனக்குறைவாக இருந்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியர் சுமதியை சஸ்பென்ட் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டதை ரத்து செய்ய கோரி பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து, தங்களது பெற்றோர்களுடன் பள்ளி நுழைவாயில் முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி