மதுரையை தலைமையிடமாக கொண்ட நியோ மேக்ஸ் நிதி நிறுவனம் அதிக வட்டி தருவதாக கூறி ராமநாதபுரத்தில் மக்களிடம் ரூ. 4 கோடியே 96 லட்சம் மோசடி செய்துள்ளது.
அந்நிறுவனத்தினரிடமிருந்து பணத்தை பெறுவதற்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பணத்தை இழந்த ராமநாதபுரம் பொதுமக்கள், ஹிந்து முன்னணி மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமையில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோனிடம் மனு அளித்தனர்