இராமநாதபுரத்தில் அடுத்த 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
காற்று வேக மாறுபாடு, வெப்பச்சலனம் காரணமாக இராம்நாடு மாவட்டத்தில் நாளை முதல் 3 தினங்களுக்கு ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அதிகாலை, மாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு; மாவட்டத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு இல்லை. ஒரு சில இடங்களில் மட்டுமே மழைக்கு வாய்ப்பு உள்ளது என இராம்நாடு காலநிலை அமைப்பு தெரிவித்துள்ளது