தூத்துக்குடி மாவட்டம் எட்டையாபுரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்த சந்தோஷ் என்ற இளைஞர் மீது காதல் மலர்ந்துள்ளது. இதை தெரிந்து கொண்ட சிறுமியின் வீட்டார் அவரை கண்டித்து பாட்டி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில், மார்ச் 23 ஆம் தேதி அன்று பரமக்குடியிலிருந்து வந்த சந்தோஷ், அவரது நண்பர் முத்தையா ஆகியோர் சிறுமியுடன் பேச முயன்றுள்ளனர், அப்போது சிறுமி அவர்களுடன் பேச மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சந்தோஷ் சிறுமி மீது மண்ணென்னெய் ஊற்றி தீ வைத்துள்ளார். தீக்காயம் அடைந்த சிறுமி சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றனர். அதில் சிறுமி, சந்தோஷும் அவரது நண்பரான முத்தையாவும் இணைந்து இச்செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார். இதையடுத்து சந்தோஷ், முத்தையா இருவரையும் பரமக்குடியில் வைத்து எட்டையாபுரம் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.