

ராமநாதபுரம்: விவசாயப் பயன்பாட்டு பொருட்கள் விற்பனை
விவசாயத்திற்கும் அதை சார்ந்த தொழில்களுக்கும் அரிவாள், கத்தி, கோடாரி, மண்வெட்டி, கடப்பாரை, கதிர் அறுக்கும் அரிவாள் தேவைப்படுகிறது. வட மாநில தொழிலாளர்கள் திருவாடானை, தொண்டி பகுதியில் தங்கியிருந்து தேவையான கருவிகளை தயாரித்து சாலை ஓரங்களில் விற்பனை செய்கின்றனர். விவசாயிகள் அவற்றை விரும்பி வாங்கிச் செல்கின்றனர்