முதுகுளத்தூர் - Mudukulathur

கோயில் ஊருணியில் கழிவுநீர் கலப்பு.!

கோயில் ஊருணியில் கழிவுநீர் கலப்பு.!

சிக்கல் அய்யன் கோயில் ஊருணி செல்லும் வரத்து கால்வாயில் கழிவுநீர் செல்வதால், சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. ஊராட்சி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். சிக்கல் அய்யன் கோயில் ஊருணி 2. 5 ஏக்கரில் அமைந்துள்ளது. முன்பு குடிநீர் ஊருணியாக இருந்தது காலப்போக்கில் கழிவுகள் கலந்ததால் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. அய்யன் கோயில் ஊருணியில் சுற்று பகுதியைச் சேர்ந்தவர்கள் குளிப்பதற்காக பயன்படுத்தி வருகின்றனர். சிக்கல் நகரில் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் நேரடியாக கோயில் ஊருணி வரத்து கால் மூலமாக நேரடியாக விடப்படுவதால் இதனால் சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. சிக்கலைச் சேர்ந்த விவசாயி போஸ் கூறியதாவது: அய்யன் கோயில் ஊருணியில் பொதுமக்கள் குளிக்க முடியாத அளவிற்கு கழிவுநீர் கலக்கிறது. 12 அடி அகலம் உள்ள ஓடையின் வரத்துக்கு கால்வாய் பகுதி தனி நபர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஓடையின் நீர்வரத்து பகுதியில் கழிவுநீர் செல்வதால் ஊருணியில் குளிப்பவர்களுக்கு தோல் நோய் உள்ளிட்ட உபாதைகள் ஏற்படுகிறது எனவே சிக்கல் ஊராட்சி நிர்வாகத்தினர் கழிவுநீர் கலப்பதை தடுத்து நிறுத்திடவும் மழை காலத்திற்கு முன்பாக முறையாக துார்வாரிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

வீடியோஸ்


இராமநாதபுரம்
வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய 4 பேர் கைது.!
Jul 22, 2024, 16:07 IST/இராமநாதபுரம்
இராமநாதபுரம்

வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை திருடிய 4 பேர் கைது.!

Jul 22, 2024, 16:07 IST
ராமநாதபுரம் அருகே பிருந்தாவன் கார்டன் முதல்தெருவில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளிப்பொருட்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பட்டணம்காத்தான் ஊராட்சி பிருந்தாவன் கார்டன் முதல் தெருவைச் சேர்ந்த சகாதேவன் 54. இவர் அரசு போக்குவரத்துக்கழக நகர் கிளை பணிமனையில் தொழில் நுட்ப பிரிவு அலுவலராக பணிபுரிகிறார். ஜூலை 18ல் இவர் மண்டபத்திற்கு சென்றுவிட்டு வீட்டிற்கு மதியம் 1: 20 மணிக்கு வருகை தந்த போது வீட்டின் இரும்பு கேட்டு உடைக்கப்பட்டும், மரக்கதவினை உடைத்து, இரும்பு பீரோவை உடைத்து அதிலிருந்த 120 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். கேணிக்கரை எஸ். ஐ. , தினேஷ்பாபு விசாரித்தார். இதில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகேயுள்ள மங்கலம் கிராமத்தை சேர்ந்த சாத்தையா 36. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை புத்தன்தருவையை சேர்ந்த பால்சாமி 43, துாத்துக்குடி மாவட்டம் குரும்பூர் பகுதியில் உள்ள ஏரலை சேர்ந்தவர் தற்போது திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலை அருகேயுள்ள ஜமுனா மரத்துாரில் வசிக்கும் ரவி 46, தேவகோட்டை சருகணி ரோடு பள்ளிவாசல் தெருவை சேர்ந்த முகமது காசிம் 43, ஆகியோர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த வெள்ளி பொருட்களை திருடியது தெரியவந்தது. மேற்கண்ட 4பேரையும் கேணிக்கரை போலீசார் கைது செய்தார்.