ராமநாதபுரம்: தொலைதூர தேர்வு மையங்கள்; மாணவ - மாணவிகள் அவதி

69பார்த்தது
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சார்பில் பிஎட் முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக முதல் பருவ தேர்வுக்கான மையங்கள் மற்றும் தேதிகள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு நேற்று முதல் தேர்வு தொடங்கி ஒரு வாரத்திற்கு மேலாக நடக்க உள்ளது. 

இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் மட்டும் 650 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முதல் பல்கலைக்கழகம் சார்பில் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் பிஎட் முதலாம் ஆண்டு முதல் பருவத் தேர்வு எழுதும் மாணவ மாணவிகள் அனைவருக்கும் 60 கிலோமீட்டர் தூரம் உள்ள முதுகுளத்தூர் அரசு கலைக் கல்லூரியிலும், பரமக்குடி பகுதியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு கடலாடியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 

இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிஎட் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் 60 கிமீ தொலைவில் உள்ள தேர்வு மையங்களுக்குச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். முன்பெல்லாம் பிஎட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு அந்தந்த பகுதியில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வு எழுதுவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி