100 நாள் வேலை வாய்ப்பு நிதி 4 ஆயிரம் கோடியை தமிழ்நாட்டிற்கு தராமல் இருக்கும் ஒன்றிய அரசை கண்டித்து கமுதி மத்திய ஒன்றிய திமுக சார்பில் 100 நாள் வேலை பார்த்த பெண்கள் காலி தட்டு ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள செங்கப்படை கிராமத்தில் கமுதி திமுக மத்திய ஒன்றிய கழகம் சார்பில் மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் தலைமையில் 100 நாள் வேலை வாய்ப்பு நிதியான நான்காயிரம் கோடி ரூபாயை தொடர்ந்து வழங்காமல் தமிழ்நாட்டிற்கு வஞ்சகம் நினைக்கும் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் 100 நாள் வேலை பார்த்த பெண் பணியாளர்கள் காலி தட்டு மற்றும் கண்டன பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷங்கள் போடப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கமுதி திமுக மத்திய ஒன்றிய செயலாளர் சண்முகநாதன் தலைமை வகித்தார்.