காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாதந்தோறும் 15-ந்தேதி பொதுமக்கள் குறைதீர் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்த மாதம் தொடர்ச்சியான விடுமுறை காரணமாக பொதுமக்கள் குறைதீர் முகாம் நாளை (வியாழக்கிழமை) காலை 9. 30 மணி முதல் மதியம் 12 மணி வரை நடக்கிறது. இதில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர் என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.