திருநள்ளாறு அடுத்த சேத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலயத்தில் மூன்றாம் ஆண்டாக தமிழ் வருட விசுவாவசு பிறப்பை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் அம்மனுக்கு நேர்த்திக்கடனாக பால் குடத்தினை விநாயகர் ஆலயத்தில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க 1000க்கும் மேற்பட்டோர் பால் குடத்தினை தலையில் சுமந்து முக்கிய வீதிகள் வழியாக வீதியுலாவாக வந்து ஆலயம் வந்தடைந்தனர்.