காரைக்காலில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ ரெகுநாதப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ரெகுநாதப் பெருமாளுக்கும் - ஸ்ரீ சீதாலெட்சுமி தாயாருக்கும் திருக்கல்யாணம் வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில் விசாகம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினமான ஸ்ரீ ரெகுநாதப் பெருமாளுக்கும் - ஸ்ரீ சீதாலெட்சுமி தாயார், லட்சுமணர், ஹனுமன் உள்ளிட்ட உற்சவர் தெய்வங்களுக்கு சிறப்பு திருமஞ்சனமும் அதனைத் தொடர்ந்து திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது.